யாழ். சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோதிமலர் ஆறுமுகநாதன் அவர்கள் இன்று 15-01-2024 ம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரவேலு ஆறுமுகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சிகரன் (பிரதேச செயலகம் பருத்தித்துறை), விமலினி (ஆறுமுகம் மல்ரி சொப்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி (யா/வட இந்து மகளிர்கல்லூரி ஆசிரியர்) அவரின் பாசமிகு மாமியாரும்,
கவிநிலாவின் பாசமிகு பேத்தியும்,
அமரர் திருச்சிற்றம்பலம் மற்றும் இரட்ணாம்பிகை மனோன்மணி ஞானாம்பிகை ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 16-01-2024 அன்று காலை 10.00 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 16, 2024
- Time of Funeral: 16th January 2024 at 10:00am
- Location of Remains: Neerveli South Hindu Cemetery
Leave a message for your friend or loved one...