யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி தில்லையம்பலம் அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அன்புக்கணவரும்,பகீரதன், காலஞ்சென்ற பகீரதி, பாரதி ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,இந்திரலிங்கம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 15-03-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Completed
