Popular

யாழ் பலகாடு காரைநகரை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா ஜெகதீசன் அவர்கள் 09-11-2024 ம் திகதி சனிக்கிழமை அதிகாலை  சிவபதமடைந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான  கந்தையா, தங்கம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான  சிற்றம்பலம்  (வாத்தியார் மருதடி, காரைநகர்), செல்லம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும், புனிதவதியின் ஆருயிர்க் கணவனும், ஜெகதாம்பிகையின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான அம்பிகை, வரதராசா, சிவமணி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், மதுரன், சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கந்தையா, கதிரவேலு, மற்றும் ஞானாம்பிகை, மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் சச்சிதானந்தன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *