Popular

ஹந்தானை உடுவல தோட்ட முன்னாள் சிரேஷ்ட குமஸ்தா காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவி திருமதி. யோகசுந்தரி அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வயோகராணி, சுந்தரராஜா, சிவயோகராஜா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்கணேசன், சாந்தி, ஆனந்தி, ஷிரானி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-08-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது மகள் செல்வி டீச்சரின் உடுவெல ஹந்தானை இல்லத்தில் நடைபெற்று, உடலம் உடுவெல பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *