யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் மற்றும் தாண்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை இராசரத்தினம் அவர்கள் 26-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசு – இராசம் தம்பதியினரின் மருமகனும்,தேவரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை), பிரேமிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம்), தர்ஜினி (அலுவலக உதவியாளர் – வவுனியா வடக்கு கல்வி வலயம்), சாள்ஸ்ராஜ் (மின்னியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மனோன்மணி (கண்ணா எள்ளுபாகு உரிமையாளர் – ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவனேஸ்வரன் (சாரதி), செல்வகுமார் (ஆசிரியர் – முல். கரிப்பட்ட முறிப்பு அ.த.க.பாடசாலை), உதயகுமார் (சாரதி), மிலக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரிஷிக்கா, பரணிதா (வவு. இறம்பைகுளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
