வரணி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், மற்றும் வரணி கொத்தணி பாடசாலைகளின் முன்னாள் அதிபர், தென்மராட்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. சிற்றம்பலம் துரைராசா (வயது 88) இன்று காலை வரணி இடைக்குறிச்சி தேவாலய வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை காலை 10:00 மணிக்கு இடம்பெற உள்ளன. அரச சேவையில் நான் ஆசிரியராக புகுந்த பொழுது எனது முதலாவது அதிபர் அமரர் துரைராசா சேர். ஒரு தந்தைக்கு ஒப்பான கண்டிப்புடனும், அரவணைப்புடனும் அவர் என்னோடு அன்று முதல் இன்று வரை பழகினார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். – லலீசன்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 21, 2026
- Time of Funeral: 21st January 2026 at 10:00am
- Location of Remains: Varani Ethakurichi Church Street.
