New

அமெரிக்காவில் கார் விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்புஅமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம் சிலி பகுதியில் இடம்பெற்ற துயரமான கார் விபத்தில், இலங்கையைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் பெண் ஹஷினி ஹேரத் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற லொறி, எதிரே வந்த ஹஷினி ஹேரத் ஓட்டிய காருடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஹஷினி ஹேரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் பயணித்த மற்றொருவர் காயமடைந்தாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதிக்கு எதிராக போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை மேம்படுத்தும் கனவுகளுடன் கடந்த ஆண்டு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருந்த இளம் உயிர்… இவ்வாறு திடீரென இழக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *