03.08.2019 அப்பா,,,, காலம் எல்லா காயங்களுக்குமான மருந்து என்று சொல்வதுண்டு ஆனால் காலத்தாலும் ஆற்ற முடியாத ரணம் உங்களின் இழப்பு! நீங்கள் இல்லாத அந்த வெற்றிடம் அத்தனை கொடிது வீட்டு சுவற்றில் புகைப்படமாய் உங்களை காணும் போதெல்லாம் மனம் கனத்து போகிறது,,,,, வெள்ளி கிழமைகளில் உங்கள் தொலைபேசி அழைப்பு ஏன் வரவில்லை என்று இன்றும் நினைப்பதுண்டு,,, அது இனிமேல் வரப்போவதே இல்லை என்று உணரும் போதெல்லாம் இதயம் சுக்கு நூறாகிப் போகிறது உம்மீது நஞ்சை உமிழ்ந்தவருக்கு கூட நன்மை நினைக்கும் உம் உள்ளம் பிடித்து போனதால் தான் இறைவன் வேண்டி உம்மை சீக்கிரம் தன்னோடு அழைத்து கொண்டான்! தோள் தோடும் வயதில் , திரும்ப முடியா தூரம் நீங்கள் போய் ஆண்டுகள் இரண்டு,,,,,,,,,😢💔
என்றும் அன்பு மகள் மீரா
Sri Lanka
Leave a message for your friend or loved one...