Popular

யாழ். நீரவியாடியை பிறப்பிடமாகவும், சுன்னாகம் மின்சார நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு கந்தசுவாமி அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தவமணி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,பிரேமலதா, பிரேமகாந்தன், சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,ஈஸ்வரன், சுகந்தி, மாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,துஷானி, சுபானி, அபிஷன், தேனுயா, திலக்‌ஷன், துஷாந் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *