யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா Toronto வை வதிவிடமாகவும் ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனுமாகிய திரு குலசிங்கம் திலீப்குமார் அவர்கள் 09-01-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.இவர் தனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் பாடசாலையிலும் பின்னர் தனது இடைநிலைக்கல்வியை ஹாட்லிக்கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பாடசாலை காலங்களில் அவர் ஒரு மிகச்சிறந்த மாணவனாகவும், கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரனாக திகழ்ந்தார். மேலும் மிருதங்கம், சாரணியம், முதல்உதவி என பல துறைகளிலும் அவரது திறமையினை வெளிப்படுத்தி இருந்தார். எமது நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக அன்னார் 1995ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து அவரது உயர்கல்வியினை University of Ottawa வில் Computer Engineering ல் இளமானிப்பட்டத்தையும், University of Toronto ல் MBA பட்டத்தினையும் பெற்று ACTO என்ற தனியார் நிறுவனத்தில் Vice President ஆக பதவி வகித்தார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
