Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் ஏசிய கூட்டனியின் தலைவரும் ஆவார்.பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள் அவரது இலலத்தில் வந்து சந்தித்து போவார்கள்.தனது காலத்தில் அரசியல் தீர்வை பெற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவர் அனால் அது கை கூடவில்லை என்பது மிக கவலையாகும்.இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *