Popular

இலங்கை முன்னாள் அமைச்சர் திரு. செல்லையா ராஜதுரை சென்னையில் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மருத்துவமனையில் தனது 98வது வயதில் உடல்நலக்குறைவால் இறையடி சேர்ந்தார்.இலங்கை முன்னாள் அமைச்சர் இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் எம். பி. யாக இருந்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய செல்லையா ராஜதுரை, தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்.இலங்கையின் தலைசிறந்த பேச்சாளராக இருந்து வந்த செல்லையா ராஜதுரை ‘சொல்லின் செல்வர்’ என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் மட்டக்களப்பு தொகுதியில் எம்.பி. யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.அதன் பிறகு தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளுக்கு அதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *