யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமகுரு சரஸ்வதி அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விநாசிதம்பி – மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,பரமகுரு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சோபனா, துவாராக ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சிவகுமாரின் மாமியாரும்,சிவசஞ்சனா, சிவயுகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற சேதுநாயகம், செல்வநாயகி, வல்லிபுரம், சந்நிரநாயகம், ஜெயராஜா, நவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
