Popular

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மெல்பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகிந்தினி பரமசிவம் அவர்கள் இன்று அதிகாலை (01-08-2023) சுகவீனம் காரணமாக இலங்கையில் காலமானார் என்னும் துயரச்செய்தி இடியென எம்மை வந்தடைந்துள்ளது. 
அமரர் மகிந்தினி பரமசிவம் யாழ் பலகலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் தொகுதியில்  பட்டதாரியாகி முல்லைத்தீவு மகா வித்தியாலயம்  உட்பட பல பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றி பின்பு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்.
 
e-கல்வி தொண்டு நிறுவனத்தில் ஆரம்ப காலம் முதல் ஒரு உறுப்பினராக, நிர்வாகசபை உறுப்பினராக, இறுதியாக 2018 இல் உபதலைவராகவும்  எம்முடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய அவரின் சிரித்த முகம் என்றும் மறக்க முடியாதது.
 
அமரர் மகிந்தினி பரமசிவம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 
 
 
தகவல்:- குமாரவேலு கணேசன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...