யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநெச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் சிவராமலிங்கம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வேலாயுதம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நாகராசா (இலண்டன்), கனகம்மா (வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுகந்தினி, குகதாஸ் (அஸ்வின் புகைப்பட கலையகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஞானதாசன் ஜெயச்சந்திரிக்கா (தரவு பதிவு இயக்குனர் – யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,அபிநயா, அஸ்வின் (கிளிநொச்சி ம.வி. மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
