யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி, புதிய உயர் கல்லூரியின் பேராதனை, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கான அரசறிவியல் மற்றும் பொருளியற் துறை முன்னாள் விரிவுரையாளரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பொருளியல் விரிவுரையாளருமான திரு. குமாரவேல் அவர்கள் இன்று 13.04.2026 காலமானார்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தாயகப்பற்றாளரும் நீண்டகாலம் தமிழீழ விடுதலைக்கான அரசறிவியல் விரிவுரைகளையும் ஆற்றியவராவார். அன்னார் நாடறிந்த பட்டிமன்ற பேச்சாளரும், நடுவரும், ஆன்மீகச் சொற் பொழிவாளருமாவார். தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் மீது பற்றுக்கொண்டவர். சந்நிதியான் ஆச்சிரமத்தோடு நீண்டகாலம் இணைந்து சமய, சமூகப்பணிகளை ஆற்றியவர். பண்ணாகம் அம்பாள் கலை மன்றம் நடாத்திய வாணி விழாவில் பலமுறை பட்டிமண்டபத்திற்கு, கவியரங்கத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். புதிய உயர் கல்லூரி நட்புகள் புதிய உயர் கல்லூரி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
