யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நகுலேஸ்வரி சங்கரப்பிள்ளை அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கார்த்திக் (இலண்டன்) இன் அன்பு தாயாரும்,சுபாங்கனி (இலண்டன்) இன் அன்பு மாமியாரும்,விமலேஸ்வரி (இலண்டன்) இன் அன்பு சகோதரியும்,நிதுன், அயன், ஆதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 12, 2026
- Time of Funeral: 12-07-2026 at 07.00 AM
- Location of Remains: Nelliyadi, Jaffna
- Funeral Location: Alangattai Hindu Cemetery.
