வடமராட்சியின் முது பெரும் முதிசம் ஒன்று சரிந்தது ???? கட்டையப்பா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கந்தசாமி அவர்கள் தன்னுடைய 102 ஆவது வயதில் 12/03/2026 இன்றைய தினம் இறைபதம் அடைந்து விட்டார் … அன்னார் அத்தாய் மாலுசந்தி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்… மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகரின் 8 ஆம் திருவிழா ( வேட்டை) உபயகாரரான இவர் ஒவ்வொரு வருடமும் தென் இலங்கையில் இருந்து யானை ????/ மான் ஆட்டம் ???? / மயில் ஆட்டம் ???? / குதிரை ???? போன்றவற்றை இறக்கி முத்து சப்பை ரத பவனியை மிகவும் சிறப்பாக நடத்தி முடிப்பவர்… இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் மிகவும் சுறு சுறுப்பானவர்.. கூனிய முதுகில் ஒரு சால்வை துண்டை அணிந்து கொண்டு மாலுசந்தி- ஆலடி வைரவர் வீதிகளில் நின்று வீதியால் செல்பவர்கள் யாராக இருந்தாலும் சால்வையை போட்டு மறித்து மோட்டார் சைக்கிளில் துள்ளி ஏறி சென்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் வல்லிபுர மாயவனை தரிசித்து வந்த ஜீவன்.. எல்லா ஆலயங்களிலும் இவரை காணலாம்..
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
