Popular

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கனகசபைமுதலி அவர்கள் மாசி 13-02-2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபைமுதலி – பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும், தியாகராசா, சிவராசா ஆகியோரின் அன்பு சகோதரரும், கிருஷ்ணமேனன் (பொறியியலாளர் – அமெரிக்கா), இராதாகிருஷ்ணன் (பொறியியலாளர்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சந்திரிக்கா (பொறியிலாளர்), ஸ்ரீவனஜா (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  அபிநேயன், அனுபாலா, அபிநயா மிதுன், அஸ்வின் ஆகியோரின் நேசமிகு அப்பப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிகிரியைகள் வெளிக்கிழமை 16.02.2024 காலை 10:00 மணியளவில் அவரது  இல்லத்தில் நடை பெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம் தகவல்:- மனைவி பிள்ளைகள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2024
  • Time of Funeral: 16th Feb. 2024 at 10:00am
  • Funeral Location: Kondaville Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...