யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோலாலம்பூர்- மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எமது கல்லூரியின் பழைய மாணவனுமான பரராசசிங்கம் பார்த்தீபன் (தீபன் 87 O/L 90 A/L) தனது 52 ஆவது வயதில் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
பரராசசிங்கம் (தெல்லிப்பழை), சிவஇன்பநாயகி (வீமன்காமம்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அன்னார், யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான இன்பரதி(83 O/L 86 A/L – கனடா ), பரந்தாமன் (85 O/L 88 A/L -நோர்வே யூனியன் கல்லூரி பழையமாணவ சங்கத் தலைவர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யோண் பப்ரிஸ் (கனடா), மஞ்சுளா (நோர்வே) ஆகியோரின் அன்பு மைதுனரும்,
கனடாவைச் சேர்ந்த வலம்புரியின் பாசமிகு மாமாவும்,
நோர்வையைச் சேர்ந்த நாவலனின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...