யாழ். கோப்பாய் தெற்கு பரமேஸ்வரி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் பிரணவன் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்) – ஸ்ரீநயினைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,நர்த்தனன் (யாழ் பல்கலைக்கழக ஊழியர்), துவாரகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,அருட்செல்வியின் மைத்துனரும்,கிஷாறாவின் அன்பு சிறிய தகப்பனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
