யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், நயினை நாகபூஷணி அம்பிகையின் உற்சவ குருமணியாக விளங்கி அன்னையின் மகோற்சவத்தை இறைபக்தியும் தெய்வீகச் சிறப்பும் மிளிர சிறப்புடன் நடாத்திய சாகித்திய சிரோன்மணி நயினைக் குருமணி வடகோவை வை.மு.ப.முத்துக்குமார சாமி குருக்கள் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று அம்பிகையின் பாதம் சரண் புகுந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் கோப்பாய் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...