யாழ். மாதகல் கிழக்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கார்த்திகேசு செல்லத்துரை அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – செல்லம்மா தம்பதியினரின் முத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற குஞ்சன், ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சிந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,கோபால் (மாதகல்), ஆனந்தன் (கனடா), கிருபா (கனடா), மீரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுசி (மாதகல்), விஜயகௌரி, அகிலா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாருஜன், மதுசன், வட்சாயினி, ஜனுயா, சாருயா, சாயித்தியா, சாயி சரண், தருணன், வருண் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
