மாத்தளை – இரத்தொட்டயை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னன்ணண் நடராஜா அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னண்ணன் – மீனம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிர்மலராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீ ரஜீவன் இன் பாசமிகு தந்தையும்,விஜயாம்பாள். கிருஸ்ணவேணி, அன்னபூரணம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.30 முதல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-08-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
