யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வாழ்விடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை சிவலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நெடுந்தீவு 13ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், நயினாதீவு 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,நாகாம்பிகை (வளர்மதி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
