யாழ். வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், புளியங்கூடல் வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது இல- 118/6 பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. சுப்ரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 23-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், சுப்ரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,தயாபரன், பவானி, அற்புதராஜா, லலிதா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, தேவநேசன், சிவநேசன், தயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சிவநேசன் (மகன்):- +94 75 242 7641
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
