யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவஞானரத்தினம் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருவாளர் சிவஞானரத்தினம் (இளைப்பாறிய சிறாப்பர் இலங்கை புகையிரதத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமார் (சிவா – பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரவிக்குமார் (ரவி), சிவசோதி (சோதி – பிரான்ஸ்) மற்றும் ஞானசோதி (ஞானம் – பிரான்ஸ்), சிவேஸ்வரி (ஈசு – டென்மார்க்), ஆனந்தகுமார் (குமார் – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:ஞானம் (மகன்):- +33 650 073 753
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
